அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுக்கான - உணவு முறைகள்
அல்சர்
அல்சர் வரும் காரணம் - நமது இன்றைய பழக்க வழக்கம் மற்றும் தவறான உணவு முறைகள் மட்டுமே. இந்நோயில் உண்ணும் உணவு செரிக்காமல், உண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் வயிற்றுள் தாங்க முடியாத எரிச்சலையும் வலியையும் உண்டாக்கி, உண்ட உணவை வாந்தியெழச் செய்து, உட்சென்ற உணவைப் பயனற்ற தாக்கும். இதனால் உடலின் வன்மையும் நாளுக்கு நாள் மெலிவடைந்து கொண்டே உடல் குன்றும்.
அல்சர் வரும் காரணங்கள்:
- மிகுதியான சூடுள்ள பொருள்களையும், காற்றை வயிற்றுள் நிரப்பக்கூடிய பொருள்களையும் உண்பதால் ஏற்படும்.
- அடிக்கடி சினங்கொள்ளல்
- பட்டினி இருத்தல்
- வழி தவறி மூச்சை அடைத்து யோக நிலையில் இருப்போருக்கும் இந்நோய் வரலாம்.
- அதிக காரம் சேர்ந்த பொருட்களைச் சாப்பிடுவதால் வரலாம்.
- மைதா, டீ, காபி, அதிக எண்ணெய் சேர்ந்த ஜங்க் ஃபுட், சத்தற்ற உணவு, துரித உணவுகள் என்னும் இவைகளை அடிக்கடி எடுத்துகொண்டால் அஜீரண கோளாறுகள் நேரிடும், இதனைத் தொடர்ந்து அல்சர் வரலாம்.
- நேர்த்திற்க்கு உணவுகள் எடுத்து கொள்வதில்லை.
அல்சர் நேரிடும் பொழுது நமது தென்நாட்டு உணவு முறைகளின் பங்கேற்ப்பு.
- காலை நேரங்களில் கண் விழித்தவுடன் பல் தேய்த்த பின் - பழைய சாதத்துடன், 5 அல்லது 6 சின்ன வெங்காயத்தை நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து உண்டு வந்தால் மிக நற்பயனை கொடுக்கும். முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும் உணவில் அதிகளவு Probiotics நிரம்பி உள்ளது. இது நமது Gut Microbiota வை சீர் செய்யும் - அஜீரணம், மந்தம், வயிற்றுபொருமல், வயிற்றிரைசல், அல்சர், ஆமம் போன்ற பல பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வை அளிக்கிறது.
- பழங்கள் மற்றும் காய்க்றிகள் காலை நேரங்களில் எடுத்து கொள்ளலாம்.
- தினமும் ஒரு நெல்லிக்காய் பச்சையாக எடுத்து கொள்ளவும்.
- காலை ஒரு 8 - 9 மணி அளவில் - வேகவைத்து எடுக்கும் உணவுகள் - புட்டு, இட்லி, ஆப்பம், சேவை, இடியாப்பம் போன்றவை எடுத்து கொண்டால் நல்லது.
- தேங்காய் சட்னிக்கு பதிலாக - சுண்டைக்காய் சட்னி, தக்காளி சட்னி, உளுந்து சட்னி, பூண்டு சட்னி சேர்த்து கொள்வது நல்லது.
- காலை நேரங்களில் சாம்பர் தவிர்க்கவும்.
- டீ, காஃபிக்கு பதிலாக - நீர் மோர், க்ரீன் டீ, லெமன் ஜுஸ், லெமன் டீ எடுத்து கொள்ளலாம்.
- துவரம் பருப்பிற்கு பதிலாக - பாசிபருப்பை சேர்த்துக் கொள்ளலாம்.
- சுண்டை வற்றல் பொடி செய்து மதியம் நேர்த்தில் - சூடு சோற்றுடன் இதைச் சேர்த்து முதற் இரண்டு வாய் சாப்பிட்டால் வயிறு எரிச்சல் போன்றவை குணமாகும்.
- புளி சேர்க்கவே கூடாது - இதற்க்கு பதிலாக தக்காளி சேர்த்து கொள்ளலாம்.
- அந்தந்த காலங்களில் கிடைக்கக் கூடிய பழங்களை எடுத்து கொள்ளவும்.
- ராகி அம்பாலி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
- அத்தி பழம், உளர் திராட்சை, பாதாம் போன்றவைகளை முந்திய நாள் ஊறவைத்து மறுநாள் தோல் நீக்கி சாப்பிடலாம். (4-5 no's உகர்ந்தது).
- மணத்தக்காளி கீரையை வாரத்திற்க்கு 2/3 முறை எடுத்துக் கொள்ளவும்.
இவைகளை முறையாக பின்பற்றி வந்தால் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
For any Queries Contact:
SAI GEETHA SIDDHA VAIDHYASHALA
Consultant: Dr Geethasre Balaji
MD Siddha Paediatrician and General Physician
Leech, Varma and Thermal Cautery Expert
Mb: 98940 48588
Comments
Post a Comment