மெய்சிலிர்க்க வைக்கும் - "பூண்டு"
ஜங் ஃபூட் மற்றும் திட உணவுகளை மட்டும் அதிகமாக விரும்பும் இந்த காலத்து மக்களுக்கு தெரியாத பூண்டின் மருத்துவ குணங்கள். இதற்கு PINK ROSE, SNAKE GRASS, RUSTIC'S THERIAC என்றும் பல்வகையான பெயர்களிட்டு மக்கள் அந்த காலத்தில் கொண்டாடினார்கள். முதன்முதலில் பூண்டை வைத்துதான் விவசாயம் துடங்கியது என்று நமக்கு அறிய வாய்ப்பில்லை. இதற்கான மருத்துவ குணங்களை காண்போம்.
ப்ரிட்டிஷ் உலக போர் காலத்தில் இது மக்களால் புகழ் பெற்ற மூலிகை என்றே கூறலாம். RUSTIC THERIAC என்று க்ரீக் மக்கள் இதற்கு பெயருட்டிய காரணம் - இது எல்லாவிதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை மிக்க மருந்து.
- எகிப்தியர்கள் அவர்களின் அடிமைகளுக்கு இதை மட்டும் உணவாகவே அதிகமாக பயன்படுத்தினர் ஏனென்றால் - இது அதிக பசியை கொடுக்காது மற்றும் பலத்தைக் கொடுக்கும் சக்தியுடையது. இதனால் அவர்களுக்கு வேளையும் அதிகமானது.
- அன்றாட இஸ்ரேல் மக்கள் இதனை - பட்டினி தூண்டி, இரத்தபோக்கு, நுண்கிருமிகொல்லியாக பயன்படுத்தினார்கள்.
- க்ரீக் மக்கள் - இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் அவர்கள் இதனை போர் செல்வதற்கு முன் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள். புழுகொல்லி, மலமிளக்கி, சிறுநீரிறக்கியாகவும் பயபடுத்தபட்டது.
- அன்றாட இந்தியர்கள் - இதனை உடற்தேற்றி, பசியின்மை, உடலசதி, தோல் நோய்கள், மூட்டு வலி, மூல நோய்களுக்கும் பயன்படுத்தி வந்தார்கள்.
- ப்ரிட்டிஷ் மக்கள் - இதில் தேன் கலந்து தேநீராக பருகி வந்தனர். இதனால் இது ஒரு புழுகொல்லியாகவும், செரிமான சம்பந்தபட்ட நோய்களுக்கு, தோல்களுக்கு சிறந்த ஊட்டசத்தாக இருந்தது.
- ரஷ்யர்கள்- பெனிசில்லினாகவும் பயன்படுத்தினார்கள் - முக்கியமாக நுரையீரல் நோய்களுக்கு வழங்கினார்கள்.
இதுமட்டுமல்லாமல் - தொற்று நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தபட்டது - Typhoid, Influenza, Diphtheria, Cholera. மற்றும்:
- அதிக கொழுப்பு சத்து.
- இரத்தகொதிப்பு
- நீரிழிவு
- சளி மற்றும் இருமல்
- புண்கள்
- அல்சர்
- சுரம்
- இளைப்பிருமல்
- பொடுகு
Comments
Post a Comment