அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுக்கான - உணவு முறைகள்
அல்சர் அல்சர் வரும் காரணம் - நமது இன்றைய பழக்க வழக்கம் மற்றும் தவறான உணவு முறைகள் மட்டுமே. இந்நோயில் உண்ணும் உணவு செரிக்காமல், உண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் வயிற்றுள் தாங்க முடியாத எரிச்சலையும் வலியையும் உண்டாக்கி, உண்ட உணவை வாந்தியெழச் செய்து, உட்சென்ற உணவைப் பயனற்ற தாக்கும். இதனால் உடலின் வன்மையும் நாளுக்கு நாள் மெலிவடைந்து கொண்டே உடல் குன்றும். அல்சர் வரும் காரணங்கள்: மிகுதியான சூடுள்ள பொருள்களையும், காற்றை வயிற்றுள் நிரப்பக்கூடிய பொருள்களையும் உண்பதால் ஏற்படும். அடிக்கடி சினங்கொள்ளல் பட்டினி இருத்தல் வழி தவறி மூச்சை அடைத்து யோக நிலையில் இருப்போருக்கும் இந்நோய் வரலாம். அதிக காரம் சேர்ந்த பொருட்களைச் சாப்பிடுவதால் வரலாம். மைதா, டீ, காபி, அதிக எண்ணெய் சேர்ந்த ஜங்க் ஃபுட், சத்தற்ற உணவு, துரித உணவுகள் என்னும் இவைகளை அடிக்கடி எடுத்துகொண்டால் அஜீரண கோளாறுகள் நேரிடும், இதனைத் தொடர்ந்து அல்சர் வரலாம். நேர்த்திற்க்கு உணவுகள் எடுத்து கொள்வதில்லை. அல்சர் நேரிடும் பொழுது நமது தென்நாட்டு உணவு முறைகளின்